கே.வி.தங்கபாலு முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு பொறுப்பாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களிடம் சிக்கி உள்ளது. அதை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் கூட்டணி அமைச்சர்கள் இடம் பெறுவதா? என்பது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும். புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான கே.வி.தங்கபாலு பேட்டி அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான கே.வி. தங்கபாலு வருகை தந்தார். அவர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ள சொத்துக்கள் எந்த நிலையில் உள்ளது. சொத்துக்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் தான் உள்ளதா? அல்லது வேறு யாரிடமாவது உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு..,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்களை பாதுகாக்கவும் மீட்பதற்கும் அகில இந்திய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, அந்தந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளதா அல்லது சொத்துக்கள் வேறு யாரிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா என்பது குறித்து என்னுடைய தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவில் காவலாளி காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு கொலை சம்பவம் நடந்த பிறகு அரசின் நடவடிக்கைகள் பாராட்டு தனது வழியாக உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிபிஐ விசாரணைக்கும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆங்காங்கே தவறுகள் இதுபோல் நடப்பதை நாங்கள் வரவேற்கவில்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எங்கு தவறு நடக்கிறதோ அங்கு சுட்டிக்காட்டுகிறோம். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை காவல்துறை சில தவறுகள் செய்வது உள்ளதை கண்கூடாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுவது இயல்பானது.
இது புதுசு கிடையாது. கடந்த ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாமும் கூறலாம். அதிகாரிகள் செய்த தவறுக்கு முதல்வரை எவ்வாறு பொறுப்பேற்க முடியும்.
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு விசாரணைகளை சிபிசிஐடி போலீசார் செய்து வருகின்றனர்.
குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளது.
சில நேரங்களில் சில வழக்குகளில் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு சில காலங்கள் தேவைப்படலாம். காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியோடு கூட்டணியில் உள்ளது.
காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற குழு தலைவர் கூட்டணி ஆட்சி அமைச்சரவையில் பங்கு என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு, பதில் அளித்த தங்கபாலு அது அவருடைய கருத்து.
கூட்டணி குறித்து முடிவெடுக்கிட வேண்டியது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை. தலைமை என்ன கட்டளையிடுகிறதோ அதை நாங்கள் செயல்படுத்துவோம். தமிழ்நாட்டுக்கு எது சரி என்பதை தேர்தல் நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிக்கும். தற்போது திமுக தலைமையில் ஒரு வெற்றி கூட்டணி செயல்பட்டு கொண்டுள்ளது.
இந்த கூட்டணி கொள்கை கூட்டணி மக்களுக்கான கூட்டணி மக்கள் நல கூட்டணி வெற்றி கூட்டணி 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மற்ற விஷயங்களைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து முடிவெடுப்பார்கள்.
தேவைப்பட்டால் கூட்டணி ஆட்சி என்பது குறித்து முடிவு எடுப்பார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கையில் இருக்கிறது.
சில சொத்துக்கள் சில தனிநபர்கள் கையில் உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பல தலைவர்களிடம் காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் உள்ளது. அதை மீட்பதற்கு முயற்சி செய்து வருகிறோம். அனைத்து சொத்துக்களும் மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும்.