சாலை விதிகளை மீறிய 9_டாரஸ் லாரிகள் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எடுத்த உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS விபத்துகள் நடக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மார்ச்_11 அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக மாவட்ட எல்லைக்குள் நுழைந்த 9 டாரஸ் லாரிகள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனம் இயக்க வேண்டும், விபத்துக்கள் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது. (மார்ச்_11)மாலை டாரஸ் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் விபத்து நடந்த இடத்தில் மரணம் அடைந்த நிலையில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் விபத்து நடந்த சில மணி நேரங்களில் டாரஸ் லாரி மீது எடுத்த நடவடிக்கை, எச்சரிப்பு, காவல்துறை அதிகாரி மீது ஒரு புதிய நம்பிக்கையின் வெளிப்பாடக உள்ளது.