சிவகங்கையில் பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா என வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி ஆய்வு. விடிய விடிய சோதனைகள் நடைபெறும் எனவும் தகவல்.


தமிழக அரசு பிற மாநில ஆம்னி பஸ்கள் தமிழகத்திற்குள் இயக்க நேற்று முதல் அனுமதி மறுத்துள்ளது. இதனை அடுத்து சிவகங்கை பேருந்து நிலையம் பகுதியில் சென்னைக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வண்டியின் ஆர்சி புக், வண்டி எண், லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். சிவகங்கையில் இருந்து சென்னை சென்னை செல்லும் பேருந்துகளை தொடர்ந்து அதிகாலையில் சென்னையில் இருந்து வரும் சொகுசு பேருந்துகளும் ஆய்வு செய்யப்படும் எனவும், இதில் போலியான ஆவணங்கள் மூலம் சொகுசு பேருந்துகள் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
