• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை

BySeenu

Nov 29, 2024

“Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஐஅம் சாரி ஐயப்பா பாடல் பாடி சர்ச்சையை ஏற்படுத்திய கான பாடகி இசைவாணி மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பஜனை பாடி இந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து முன்னணி பொறுப்பாளர் கிருஷ்ணன்,

I Am Sorry iyyappa என்று சர்ச்சைக்குரிய வகையில் இசைவாணி பாடல் பாடி தற்பொழுது ட்ரெண்டாகி வருவதாகவும், இந்த பாடல் கோடிக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் மனதை புண்படுத்துகிறது. இசைவாணி கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பனை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாகவும், பெண்கள் ஏன் கோவிலுக்கு வரக்கூடாது என என்று கிண்டலாக பாடி உள்ளார். இது இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இசைஞானி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் கைது செய்கிறார்கள். ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பாடியதற்கு கைது செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்றும் கடுமையாக நடவடிக்கை எடுத்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்து மதத்தையும் கலாச்சாரத்தை சீரழிக்க வருவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.