விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ரோட்டின் ஓரத்தில் கொட்டி வைத்து வருகின்றனர்.

ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் குப்பை கழிவுகளில் உணவு இருக்கிறதா என ஒன்றுக்கு ஒன்று சாப்பிடுவதில் கால்நடைகளுக்குள் சண்டை ஏற்படுகிறது. மெயின் ரோட்டில் சண்டையிட்டுக் கொள்வதால் கால்நடைகளை கடந்து செல்ல முடியாமல் வாகன ஒட்டிகளும், நடந்து செல்பவர்களும் அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டில் தானாக திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும் கால்நடை வளர்ப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.