• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குற்றவாளி பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

BySeenu

Dec 16, 2024

கோவையில் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட “அல்லும்மா” இயக்க தலைவர் பாஷா கடந்த மூன்று மாதங்களாக பிணையில் உள்ளார்.

இந்த நிலையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நேற்று கோவை பீளமேடு PSG தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.