• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போதிய இடவசதி இல்லாமல் இயக்கும் மழலையர் பள்ளி விபத்து.., பாதுகாப்பு இல்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு…

ByKalamegam Viswanathan

Jan 3, 2024

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே பாடசாலை செல்லும் வழியில் சார்லஸ் என்னும் தனியார் மழலை பள்ளி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும் இது பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டாலோ இல்ல அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டாலோ குழந்தைகள் வெளியே செல்வதற்கான போதிய வழிகள் இல்லை.

மேலும் இந்த பள்ளி அடிக்கடி இடம் மாற்றி வருவதாகவும், ஒரே இடத்தில் செயல்படுவது இல்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இப்பொழுது செயல்பட்டு வரும் இந்த பள்ளி இதற்கு முன்பு உணவு விடுதியாக இருந்ததாகவும், குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். மாவட்ட ஆட்சியாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் உயிர்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரையும் எதிர்பார்ப்பாக உள்ளது.