உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஏற்பாட்டில் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு செய்யப்பட்டது. இந்த காப்பீடு மூலம் விபத்தில் உயிரிழந்தாலோ, கை, கால், கண் உள்ளிட்ட ஊனம் ஏற்பட்டாலோ ரூபாய் 5 லட்சம் காப்பீடாக வழங்கப்படும்.

அதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மட்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மே தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய பாஜக மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் "தொழிலாளர்கள் 24 மணி நேரமும் தனது குடும்பம் குழந்தைகள் என்று இருந்து விடுகின்றனர். தங்களை அவர்கள் கவனித்துக் கொள்ளவில்லை. எனவே இவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களது குடும்பத்திற்கு செய்யும் சிறு உதவியாகவும் இந்த ஐந்து லட்ச ரூபாய் காப்பீடு திட்டத்தை ஏழை எளிய தொழிலாளர்களுக்கு செய்திருப்பது மன நிம்மதி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.