• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாததால் ஏற்பட்ட விபத்து..,

BySeenu

Aug 25, 2024

இருசக்கர வாகனத்தில் சென்ற 36 வயதுடைய இளைஞர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவசர, அவசரமாக தற்பொழுது சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வரும் நெடுஞ்சாலைத் துறை கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலையில் தீத்திபாளையம் அருகே உள்ள சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை, தடுப்புகள், வேகத்தடை போன்ற எந்த ஒரு தடுப்புகள் இல்லாமல் பணிகள் நடைபெற்று வந்து உள்ளது .

இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே தேவராயபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய கார்த்திகேயன். இவர் தனியார் இரண்டு சக்கர வாகன உறுதி பாகங்கள் நிறுவனத்தில் மண்டல அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லீலா என்ற மனைவியும், மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் கயல், எல்.கே.ஜி படிக்கும் மகன் கவின் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அலுவலக பணியாக பெங்களூருக்கு சென்று இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அங்கு இருந்து கோவைக்கு ரயில் மூலம் வந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற போது பேரூர் அடுத்த தீத்திபாளையம் அருகே சாலையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், வேகத்தடை, இரும்பு தடுப்புகள் போன்ற எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடந்து வரும் மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பெயரில் பேரூர் காவல் துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது அவசர, அவசரமாக நெடுஞ்சாலைத் துறையினர் அந்த சாலையில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சாலையில் மணல்களை நிரப்பி தடுப்புகளை அமைத்து வருகின்றனர். உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பே இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தால் விபத்து நடந்து உயிரிழப்பு தடுத்து இருக்கலாம் என நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையினர் எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், தடுப்புகள் அமைக்காமல் சாலையின் நடுவே மேம்பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.