• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பேரிக்காடுகள் கீழே விழுந்து விபத்து..,

ByKalamegam Viswanathan

Jun 16, 2025

உலகக் காற்று நாள் ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் நாள். ஆகவே இன்று உலக காற்று நாள் தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்ட முழுவதிலும் பலத்த காற்று வீசி வருகிறது.

இதன் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்ட தடுப்புகள் காற்றில் பறந்தன மாநகரின் பிரதான பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து கட்டிடங்கள் மீது விழுந்ததோடு மட்டுமின்றி மின் கம்பிகள் அறுந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் தொடர்ந்து காலை முதல் பலத்த காற்று வீசி வரும் நிலையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் சாலையில் நடுவே வைக்கப்பட்டிருக்கக்கூடிய பேரிக்கார்டுகள் ஆங்காங்கே சாலையில் கீழே விழுந்து உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவருகிறது

மதுரை ஓபுளா படித்துறை மேம்பாலத்தின் நடுவே வைக்கப்பட்டிருக்கக் கூடிய பேரிக்காடுகள் பலத்த காற்று காரணமாக வரிசையாக கீழே விழுந்து வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

சிமெண்ட் பூசப்பட்ட நிலையில் பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டபோதும் சிறிய அளவிலான வீசும்போது கூட கீழே விழுகும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதால்

இன்று பலத்த காற்று வீசியபோது மேம்பாலத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்த அனைத்து தடுப்புகளும் கீழே தொடர்ச்சியாக விழுந்த போது பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது விழந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் வாகனம் ஓட்டி வந்த நபரின் கை மற்றும் காலில் பேரிகார்டடு சிமெண்டு பூச்சுடன் விழுந்து காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக பேரிக்கார்டு கீழே விழுந்த போது பைக்கில் இருந்து தவறி சாலையில் விழுந்த தம்பதியின் பின்னால் வந்த வாகனங்கள் உடனடியாக பிரேக் பிடித்து நின்றதால் தம்பதி நொடிப்பொழுதில் சேதமின்றி தப்பித்தனர்.

மதுரை ஓபுளா படித்துறை பகுதியில் உள்ள மேம்பாலத்தில் தடுப்புகள் முறையாக சிமெண்ட் பூச்சு செய்து நட்டுகள் பொறுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பேரிக்கார்டுகள் முழுவதுமாக சாலையில் சாய்ந்து விழுந்து வாகன ஓட்டிகள் மீது விழுவதால் வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படும் நிலை தொடர்ந்துவருகிறது.

எனவே ஓபுளா படித்துறை பகுதியில் மேம்பால பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய பேரிகார்டுகளை கீழே விழுகாத வகையில் முறையாக அமைக்க மாநகராட்சி நிர்வாகமும் போக்குவரத்து காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.