மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பைபாஸ் ஆண்டாள்புரம் பகுதியில் முத்துகாமாட்சி செப்டிங் டேங்க் கிளினிங் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி பெரியார்பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடிரென பின்னால் இருந்த இரண்டு டயர்களும் கழன்று ஓடியது.

வேகத்தில் சென்றுகொண்டிருந்த லாரியில் டயர்கள் கழன்றதால் மின்னல் வேகத்தில் லாரிக்கு முன்பாக டயர்கள் ஓடியது.
அப்போது லாரியின் ஒரு டயர் பறந்து சென்று சாலையில் சென்றுகொண்டிருந்து பைக் மீது பலமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற நபர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் அருகில் இருந்தவர்கள் மற்றும் லாரி ஓட்டுனர் காயம்பட்ட நபரை மீட்டனர்.

நல்வாய்ப்பாக டயர் மோதி கீழே விழுந்த நபருக்கு பெரிய அளவிலான காயமின்றி தப்பினார். ஆனால் பறக்கும்தட்டு போல பறந்துவந்த டயர் மோதிய அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மயக்கத்திலயே இருந்தார். நேற்று அதிகாலை நடந்த இந்த விபத்து தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கடலூர்்அருகே அரசு பேருந்தில் லாரி டயர் வெடித்து கார் மீது மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் தனியார் லாரியில் டயர் கழன்று பறந்துசென்று ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி வெளியாகியுள்ள நிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுபோன்ற கனரக வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.




