

மதுரை மாவட்டம், மதுரை எல்கேபி நகர் நடுநிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை அனுசியா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சக்கிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சவுக்கத் அலி கலந்து கொண்டு போதைப் பழக்கம் ஏற்படும் முறை, வழிமுறைகள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள், உடல்நல பாதிப்பு ஆகியன குறித்து சிறப்புரையாற்றினார்.

மாணவி போதும் பொண்ணு உறுதிமொழியை வாசிக்க, அனைத்து குழந்தைகளும் உறுதிமொழி ஏற்றனர். மாணவி உதய சந்திரிகா தொகுத்து வழங்கினார். ஆசிரியை மனோன்மணி நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

