• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஏ.சி.மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

Byவிஷா

Apr 19, 2025

சென்னையில் ஏ.சி.மின்சார ரயில் சேவை இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
இன்று முதல் தமிழகத்தின் முதல் ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவை சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் 12 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். ஏற்கனவே, இந்த வழித்தடத்தில் சாதாரண வகையைச் சேர்ந்த மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கோரிக்கையின் அடிப்படையில், இப்போது குளிர்சாதன வசதியுடன் புதிய சேவை தொடங்கப்படுகிறது.
சென்னை கடற்கரை–தாம்பரம் மற்றும் கடற்கரை–செங்கல்பட்டு ஆகிய புறநகர் வழித்தடங்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவை அனைத்தும் ஏ.சி. வசதி இல்லாத சாதாரண ரயில்கள். ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, ஏ.சி. வசதியுடன் கூடிய மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது ஏற்பட்ட சில தொழில்நுட்ப பிரச்சனைகள், குறிப்பாக ஏ.சி. பகுதியின் அதிர்வுகள், உடனடியாக சரிசெய்யப்பட்டன.
இந்த ஏ.சி. ரயிலின் கட்டண விவரங்கள் சென்னை கடற்கரை – தாம்பரம் (29 கிமீ): ரூ.95, 9 கிமீ பயணம்: ரூ.35, 24 கிமீ பயணம்: ரூ.70, 34 கிமீ பயணம்: ரூ.95 ஆகும்.