• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

திருப்பதி கோவிலின் நகலை கட்டுதாம் அபுதாபி… அடேங்கப்பா!..

Byகாயத்ரி

Feb 4, 2022

முதல் பாரம்பரிய இந்து கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கோவில் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபுதாபியில் சுமார் ரூ.888 கோடி செலவில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கோயில் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய, அபுதாபி பாப்ஸ் இந்து மந்திர் திட்டப் பொறியாளர் அசோக் கொண்டெட்டி, ‘அடித்தளம் தரையிலிருந்து 4.5 மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இரண்டு நிலத்தடி அறைகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்களைக் குறிக்கும் வகையில் ஏழு பெரிய கோபுரங்களைக் கொண்டிருக்கும்.

இந்த கட்டுமானம் இந்தியா மற்றும் அரபு நாடுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் மிகவும் பாக்கியமாக உணர்கிறேன். இது ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், கோவில் கட்ட 20,000 சதுர மீட்டர் நிலத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றபோது, இந்த திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசால் அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு துபாய் சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள ஓப்ரா ஹவுஸிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கோயிலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த வளாகத்தில் சந்திப்பு மையம், பிரார்த்தனை கூடம், நூலகம், வகுப்பறை, சமூக மையம், அரங்குகள், ஆம்பிதியேட்டர், விளையாட்டு பகுதி, தோட்டங்கள், புத்தகங்கள் மற்றும் பரிசு கடைகள், உணவு அரங்கம் மற்றும் பிற வசதிகளும் இருக்கும்.

அபுதாபியின் முதல் இந்து கோவிலான இது திருப்பதி போன்றே இருக்குமாறும், அதேபோல பழமையான கோவில் வடிவத்தையும் கொண்டிருக்குமாறு உருவாக்கி வருகிறது.

1000 ஆண்டுகளுக்கு மேல் தாங்கும் வகையில் உருவாக்கி வருகிறோம் .2023 அதாவது அடுத்த ஆண்டுக்குள் இதன் பணிகள் முழுமையடையும்’ என்று கூறினார்.