விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சி கீழச்செல்லையாபுரத்தில் சுந்தாளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
