பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூரில்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் மற்றும் தொடர் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆட்சியில் தொடர் மின் கட்டண உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியின் படி மாதந்தோறும் மின கணக்கீடு செய்ய வேண்டும், இந்த முறையை உடனடியாக அமல்படுத்த கோரியும, விண்ணை மட்டும் விலைவாசி உயர்வுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.