உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் மாநாடு சென்னை P.T. தியாகராஜர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பெண்களின் அரசியல் அதிகாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்து விரிவாக கருத்துக்களை பகிர்ந்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ். குமாரி, சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் அருள்மொழி, அங்கயர் கன்னி, சத்யா தனக்கோடி மற்றும் கல்வியாளர் டாக்டர் எம். ரஜினி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய இணைச் செயலாளர் டாக்டர் தாமோதரன், மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் அரசியல் பங்களிப்பு குறித்து பேசினர்.
மாநில தேர்தல் பரப்புரை குழு உறுப்பினர்களான மகளிர் அணி டாக்டர் நேத்ரா ஸ்ரீ மற்றும் சோபியா பாமா ஆகியோர் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தனர். மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் கிருஷ்ணவேணி, சிறுபான்மை அணி செயலாளர் கைசர், கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர் ரமா, வழக்கறிஞர் பிரிவு சங்கீதா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.

மேலும் மத்திய சென்னை தலைவர் ஹெச்.எம்.டி ஆரிப், தென் சென்னை தலைவர் வினோத்குமார், மாநில ஊரக வளர்ச்சி விருது செயலாளர் கௌரி பாபு, கிழக்கு மாவட்ட தலைவர் சர்மிளா பானு, ஈரோடு மாவட்ட தலைவர் சுனிதா உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



