மதுரை மாவட்ட கோயில்களில் 07.08.24 புதன்கிழமை காலை ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆடிபுரத்தை ஒட்டி,மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அம்மன்களுக்கு, வளைகாப்பு விழா நடைபெறும். முன்னதாக, அம்மன்களுக்கு, பால், மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர் சந்தனம் போன்ற போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். மதுரையில் அண்ணாநகர் தாசில்தார்நகர், அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில் காலை 10:30 மணி அளவில், மதுரை தாசில்தார்நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் காலை 10 மணி அளவில், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில், காலை 9 மணி அளவில், மதுரை வர சித்தி விநாயக ஆலயத்தில், காலை 10 மணிக்கு மற்றும் மதுரை கோமதிபுரம் ஜூபிலி டவுன் ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் காலையில், துர்கை, மீனாட்சி, மீனாட்சி அம்மனுக்கு வளையல் காப்பு நடைபெறுகிறது. மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், காலை 8.30 மணி அளவில் சிறப்பு அபிஷேகமும், காலை 10.30..மணி அளவில் அம்மனுக்கு வளையல் காப்புப் நடைபெறும். அதைத் தொடர்ந்து, வராஹியம்மன், துர்க்கை, லட்சுமி, மீனாட்சிக்கு பக்தர்களால் வளையல் காப்பு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.