• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பரிதாப பலி

வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் பள்ளத்தில்கவிழ்ந்தது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு கவுண்டம்பாளையம் பகுதியில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின் அழுத்த கம்பிகள் டவர் அமைக்கும் பணியில் சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் டிராக்டர் TN 99 F 0572 வாகனம் மூலம் வேலை ஆட்களையும் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு எடக்காடு கவுண்டம்பாளையம் பகுதி மண் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் பள்ளத்தில்கவிழ்ந்தது. இரண்டு பல்டிகள் அடித்து நின்றது, அதில் பயணம் செய்த சேலம் மேட்டூர் பகுதி சேர்ந்த. வாகன ஓட்டுனர் செல்வம் வயது 37 த/பெ சடையன் ஊழியர்கள் மணிகண்டன் வயது 25 த/பெ சுப்பிரமணி ராஜேந்திரன் வயது 26 த/பெ ரத்தினம் பாபு வயது 24 த/பெ கோவிந்தராஜ் விபத்துக்குள்ளானார்கள் அப்பகுதி பொதுமக்கள் மஞ்சூர் காவல் நிலையத்திற்கும் 108 வாகனத்திற்கும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

108 வாகனங்கள் மூலம் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது பலத்த காயமடைந்த மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற மூன்று நபர்களுக்கும் காது மற்றும் கை கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்களும் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை இருந்த மணிகண்டன் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தக் கசிவினால் உயிரிழந்தார் .விபத்து ஏற்பட்ட பகுதியில் கிராம அலுவலர் மற்றும் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.