• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீர் மூழ்கி பலி

ByJeisriRam

Apr 20, 2024

முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் 8 மணி நேரம் போராடி வாலிபர் உடல் சடலமாக மீட்கப்பட்ட காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் கெஞ்சயன்குளம் பகுதியைச் சார்ந்த டிரைவர் கணேசன் என்பவரின் மகன் பிரேம்குமார் வயது 22 இவர் நேற்று மாலை நண்பர்களுடன் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் அருகே உள்ள வண்ணத்துறை பகுதியில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது ஆழமான பகுதிக்கு சென்ற பிரேம்குமார் நீச்சல் தெரியாத காரணத்தினால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடனடியாக நண்பர்கள் அவரை தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் குமுளி காவல் நிலையம் மற்றும் கம்பம் தீயணைப்பு துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது

தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேரம் முல்லைப் பெரியாற்றில் பிரேம்குமார் உடலை தேடி கிடைக்காததால்,முல்லைப் பெரியாற்று தண்ணீரை நிறுத்திவிட்டு 4 மணி நேரத்துக்கு முன்பாக பிரேம்குமார் உடலை சடலமாக மீட்ட கம்பம் தீயணைப்பு துறையினர் பிரேம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தில் நிறைய பெரும் சோகத்தை ஏற்படுத்தி கதறி அழுதனர். ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்டது. கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து குமுளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.