• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாலிபர் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு

ByArul Krishnan

Feb 23, 2025

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணா நகர் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் முத்து கார்பெண்டர். இவர், அவரது தாய் தெய்வநாயகி இரண்டு பேரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அவரது உறவினர் அண்ணன், தம்பி இரண்டு பேருக்கு குடும்பத் தகராறு நடைபெற்று இருந்தது. அதனை முத்து இரண்டு பேரையும் சமாதானம் செய்துள்ளார். இந்த நிலையில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஆகாஷ் இந்த குடும்ப பிரச்சினையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது முத்து இது அண்ணன் தம்பி குடும்பப் பிரச்சனை. இதில் நீ ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு ஆகாஷ் ஆத்திரமடைந்து முத்துவை கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் முத்து இதுகுறித்து காவல் நிலையத்தில் காலை புகார் செய்வதாக கூறியிருந்த நிலையில், நள்ளிரவு முத்து அவரது தாய் தெய்வநாயகி இரண்டு பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அப்பொழுது நள்ளிரவு ஒரு மணிக்கு ஆகாஷ் முத்து வீட்டின் ஜன்னல் பகுதியில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளார். அப்பொழுது சத்தம் கேட்டு முத்து, தெய்வநாயகி இரண்டு பேரும் கண்விழித்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் பகுதி எரிந்து கொண்டு இருந்தது. பின்னர் அவர்கள் அந்த தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து முத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். அதன் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.