• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி..!

ByKalamegam Viswanathan

Sep 20, 2023

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி. இவர் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார்.இவரது மகன் விக்னேஷ் வயது 25 சோழவந்தான் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார். சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மதியம் முதல் இரவு வரை பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மில் மின்சாரம் தடைபட்டது. இதை சரி செய்ய விக்னேஷ் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்வதற்காக அங்கு சென்றுள்ளார்.அப்பொழுது பலத்த காற்று வீசியதில் தென்னைமர ஓலை டிரான்ஸ்பார்ம் வயரில் விழுந்து கீழே தொங்கியது. தொங்கிய ஓலை விக்னேஷ் மீது பட்டுள்ளது. இதனால் ஓலை விழுந்ததில் இவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் சம்பவ இடத்திலே விக்னேஷ் துடிதுடித்து இறந்தார். இது குறித்து சோழவந்தான் கிராமநிர்வாக அலுவலர் கோபாலகண்ணன் சோழவந்தான் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷ் பிணத்தை கைப்பற்றி சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு விசாரணை செய்து வருகிறார். தகவல் அறிந்து மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.