• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை?

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே  க.விலக்கு – கண்டமனூர் சாலையில் உள்ள மதுரை – போடிநாயக்கனூர்  ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையத்து அங்கு விரைந்து வந்த க.விலக்கு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் அணிந்திருந்த ஆடையில் இருந்த அடையாள  மூலம் இறந்தவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (37) என்பது தெரிய வந்தது.
 மேலும் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், இறந்தவருக்கு உடல் நலக் குறைபாடு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  வந்ததாகவும், இதனால்  மனம் வெறுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்த போலீசார் அவர்களிடமும் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.