தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தில் 22 மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவரணி சார்பில் மதுரை நேதாஜி ரோடு ஜான்சி ராணி பூங்கா அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிமுக முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நீட் தேர்வை ரத்து செய்ய ரகசிய நிற்பதாக கூறி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக ஸ்டாலின் மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறோம், என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த 22 மாணவ மாணவியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.