இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்றது. சிவகங்கை நகர செயலாளர் வழக்கறிஞர் பா. மருது தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாநில செயலாளர் தோழர் கண்ணகி சிவகங்கை மாவட்ட செயலாளர் தோழர் சாத்தையா மாவட்ட குழு உறுப்பினர்கள் கங்கை சேகரன், சந்திரன் ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, மாதவன் நகர துணை செயலாளர் எம். எஸ். சகாயம் பாண்டி, ஆட்டோ சங்க நகர செயலாளர் பாண்டி, குஞ்சரம், காசிநாதன் மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.









