• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உசிலம்பட்டியின் பொருளாதார வளர்ச்சி குறித்த கோரிக்கை எடுத்துரைக்கும் வண்ணம் சிறப்பு கருத்தரங்கு

ByP.Thangapandi

Mar 2, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் உசிலம்பட்டியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும் திட்டங்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கோரிக்கையாக முன் வைப்பது குறித்த கருத்தரங்கு பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முத்துச்செழியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்., முன்னாள் எம்எல்ஏ கதிரவன் மற்றும் திமுக, பார்வட் ப்ளாக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பெரிஸ் நிறுவனத்தின் இயக்குனர் பெரிஸ் மகேந்திரவேல் மற்றும் விவசாய சங்கத்தினர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டியின் வளர்ச்சிக்கான தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.

உசிலம்பட்டியில் விவசாயம் மீண்டும் செழிக்க 58 கால்வாய்க்கு நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை பெறுவது., உசிலம்பட்டியில் நறுமண தொழிற்சாலை மற்றும் சிப்காட் தொழிற்சாலையும் கொண்டு வருவது என பல்வேறு கோரிக்கையை வரும் தேர்தலில் எம்.பி. ஆக தேர்வாகும் மக்கள் பிரதிநிதி திட்டங்களை அமைத்து செயல்படுத்த கோரிக்கை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்தரங்கில் முடிவெடுக்கப்பட்டது.