மகளிர் தின சிறப்பு விழாவை முன்னிட்டு சென்னை ஆதாம்பாக்கத்தில் அமைந்துள்ள ரெயின்போ சிட்டி அரங்கில் ஹெச் ஆர் டபிள்யு எஃப் மற்றும் ரெயின்போ சிட்டி இணைந்து வழங்கும். “வானவில் தாரகை” சிறப்பு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்களுக்கான இந்த விருது குறிப்பாக, போக்குவரத்து காவல் துறை,ஆட்டோ ஓட்டுனர்கள், சின்னத்திரையை சார்ந்தவர்கள், பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் பெண்மணிகள், சுயதொழில் நடத்தி குடும்பத்தைக் காக்கும் பெண்மணிகள், ஊடகத் துறை என சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த”வானவில் தாரகை”விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.