• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கால் முறிந்த குரங்கிற்கு சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர்

ByKalamegam Viswanathan

Mar 10, 2023

சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு , சமூக ஆர்வலர் சிகிச்சை அளித்து அதை பராமரித்து வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு.
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள சமூக ஆர்வலரும், பாம்பு பிடிக்கும் வல்லுநரும், இருசக்கர வாகன மெக்கானிக் சகாதேவன் (35), தனக்கன்குளம் நான்கு வழிச்சாலை பகுதியில் அடையாளம் தெரியாத கார் ஒன்று, அவ் வழியே தாகம் தீர்க்க தண்ணீர் தேடி வந்த குரங்கு மீது மோதி விபத்து குள்ளானதில், குரங்கின் வலது கால் முறிந்து சம்பவ இடத்தில் துடிதுடித்து கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த சமூக ஆர்வலரான சகாதேவன், அந்த குரங்கினை விலங்கின மருத்துவத் துறையிடம் கால் முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு மருத்துவ சிகிச்சை அளித்து, தன்னுடைய இருசக்கரவாகனக் கடையில் வைத்து, அந்த குரங்கிற்கு போதிய உடல் வலிமைக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து , அதை பராமரித்து வனத்துறைரிடம் ஒப்படைப்பதற்காக சேவை செய்து வரும் சகாதேவனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்