மக்களுக்கு அச்சுறுத்தம் வகையில் வில்லாபுரம் பகுதியில் உள்ள இன்டேன் கேஸ் கம்பெனியை இடமாற்றம் கோரி சமூக ஆர்வலர் போஸ்டர் ஒட்டினர்.
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் இயங்கி வரும்(indane) கேஸ் குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலரும், பாஜக அவனியாபுரம் மண்டல் தலைவர் கருப்பையா என்பவர் ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருப்பையா கூறுகையில்..,
மதுரை – அருப்புக்கோட்டை மெயின் ரோடு மீனாட்சி நகர் பேருந்து நிறுத்தம் அருகே இன்டேன் கேஸ் குடோன் செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இந்த கேஸ் குடோன் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த கேஸ் கம்பெனி சுற்றி மூன்று மாடி திரையரங்கம், வணிக வளாகங்கள், வங்கிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளது. பெட்ரோல் பல்க், ஆகியவை உள்ளது.
கேஸ் குடோன் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை செயல்படக் கூடாது என்ற சட்ட விதி உள்ள நிலையில் பலமுறை இது குறித்து மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இன்டேன் கேஸ் கம்பெனி உரிமையாளர் இடத்தை காலி செய்ய மறுக்கிறார். அதனால் எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விபத்து ஏற்படும் பட்சத்தில் பகுதியில் உள்ள சுற்றுபுற பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த கேஸ் குடோனை காலி செய்து பாதுகாப்பான இடத்தில் அமைக்க உத்தரவு இடும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
