• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஷன்வித்தா ஸ்ரீ உலக சாதனை

BySeenu

May 6, 2024

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஷன்வித்தா ஸ்ரீ ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கோவை வடவள்ளி இடையர்பாளையம், பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்,கீதா ஆகியோரின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ.ஆறு வயதான சிறுமி ஷன்வித்தா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது ஆர்வம் கொண்ட சிறுமி,ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணிணியில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின் ஆர்வத்தை கண்ட பெற்றோர் தனியாக பயிற்சி அளித்துள்ளனர்.இதனை தொடர்ந்து சிறுமி தமிழ் எழுத்துக்களான பனிரெண்டு உயிர் எழுத்துக்கள் ,18 முதன்மை உயிர் மெய் எழுத்துக்கள்,18 மெய்யெழுத்துகள்,ஆயுத எழுத்து மற்றும் ஓம் எனும் ஆன்மீக எழுத்து என ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் டைப் செய்து இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.குறிப்பாக ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணிணியில் ஆறு வயதான சிறுமி செய்த இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தொல் காப்பிய தமிழ் சங்கமம் ,உட்பட பல்வேறு அமைப்பினர் இணைந்து சிறுமி ஷன்வித்தாவிற்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தனர். பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர் தமிழ் எழுத்துக்களில் சிறுமி செய்த சாதனையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்தனர்.