• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை: பயிர்களை ரசித்து, ருசித்து தின்று சேதப்படுத்தும்-வீடியோ காட்சிகள்…

BySeenu

Aug 26, 2024

தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை. பொறுமையாக நின்று பயிர்களை ரசித்து, ருசித்து தின்று சேதப்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாயின.

கோவை, தொண்டாமுத்தூர், தடாகம், நரசிபுரம், கெம்பனூர், ஆலாந்துறை, மதுக்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து உணவு, தண்ணீர் தேடிக் கொண்டு ஆவேசத்துடன் அலைந்து வருகிறது. இந்நிலையில் தடாகம், பன்னிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி மணி என்பவர் கொய்யா தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டு இருந்த தென்னை, வாழை, கொய்யா போன்ற மரங்கள் மற்றும் பயிர்களை பொறுமையாக நின்று, ருசித்து, தின்று சேதத்தை ஏற்படுத்தி சென்று உள்ளது. இதனைக் கண்ட விவசாயி இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் தனது செல்போனில் யானை நின்று பொறுமையாக பயிரிடப்பட்ட பயிர்களை ரசித்து, ருசித்து உண்ணும் காட்சியை பதிவு செய்து உள்ளார். தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு உள்ளத்தால், பொதுமக்களும், விவசாயிகளும் நாள்தோறும் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது புலம்பி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை இங்கு உள்ள விவசாயிகளின் கண்களில் தண்ணீரைத் தவிர, தூக்கம் வராது என்பதே நிதர்சனமான உண்மை. தமிழக அரசும், வனத்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.