• Wed. Dec 11th, 2024

தொடர் விடுமுறை எதிரொலி – கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

Byவிஷா

Oct 2, 2023

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை எதிரொலியால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மலைகளின் இளவரசியாகத் திகழும் கொடைக்கானலில் தினந்தோறும் ஏராளாமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இங்கு எப்போது பார்த்தாலும் இதமான கால சூழ்நிலையும், பசுமை போர்த்திய புல்வெளிகள் தான் சுற்றுலா பயணிகளை ஈர்கின்றது.
மலைகளின் மீது கொஞ்சி விளையாடும் மேகங்கள் மற்றும் சாலையில் இருபுறங்களும் மரங்கள் என்ற சூழலை காணவே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக கடந்த மூன்று தினங்களாகவே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நோக்கி வருகின்றனர்.
அதனால் கொடைக்கானல் நகரின் நுழைவாயிலான பெருமாள் மலையில் இருந்து சுற்றுலா பயணிகளின் வாகனம் அணிவகுத்து நிற்கின்றது. அதேபோல் நட்சத்திர ஏறி, நாயுடுபுரம் வனத்துறைக்கு கட்டுப்பட்ட குணா குகை, மோயர் சதுக்கம், பயன்பாரெஸ்ட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.
மேலும் சுமார் 2 மணி நேரம் முதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் புழு போல் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் அந்த பகுதிகளில் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகளும் குறிப்பிட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தாதாலும் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.