இந்திய அளவில் ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் ஆளாகி அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் சமுதாயங்கள் நிறைய இருக்கிறன்றன என்று பலராலும் பேசப் படுகின்றன. அது மதரீயாகவும், சாதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள், பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் வெளியில் வந்து விடுகின்றன என்பதை வட இந்தியாவில் பார்க்க முடிகிறது.
வட இந்தியா என்றால் அங்குள்ள மக்கள் எப்படியிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இங்கு பெரிய அளவில் தொழில் செய்து கொண்டிருக்கும் மார்வாடிகள் மட்டுமல்ல, இங்கு சாலையோரங்களில் தங்கியிருந்து இரும்படித்து விவசாயக் கருவிகள் தயாரித்து விவசாயிகளிடம் விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தும் மக்களையும் பார்க்க வேண்டும். அவர்களுக்கு இருக்கும் சுதந்திரமும், கல்வியும், பொருளாதாரமும் அவ்வளவுதான் என்பதை அவர்களைப் பார்த்தே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் தமிழ்நாட்டில் குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது தொடங்கி திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்ததில் இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனாலும் இங்குள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்றால் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றுதான். அதுவும் இப்போது கேள்விக்குறியாகி நிற்பதாக சமூக ஆர்வலர்களும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்ககாக் குரல் கொடுப்பவர்களும் ஆதங்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் சேர்ந்து பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு என்றொரு அமைப்பை ஏற்படுத்தி செயல் பட்டு வருகிறார்கள்.
இக்குழுவின் தலைவர் நந்தன் கூறுகையில்..,
1999ஆம் ஆண்டு முதல் 2025 ஜூன் மாதம் வரை பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 1536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 517-வழக்குகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. 361-வழக்குகள் நீதி மன்ற விசாரணையிலும். 19-வழக்குகள் காவல்துறை விசாரணையிலும் இருக்கின்றன. தண்டனை என்று பார்த்தால் வெறும் மூன்று சதவீத புகார்களில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இதற்கென்று இருக்கும் நீதி மன்றத்திற்கு உடனடியாக தனி நீதிபதி நியமிக்கப்பட வேண்டும். இது குறித்து பத்து தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்றார்.