தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் சாமி தரிசனம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார்.

சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவை பாஜக நிர்வாகிகள் குருக்கள்பட்டி மாடசாமி, சங்கரசுப்பு செந்தில் பாண்டியன் வேல்முருகன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி, துணைத் தலைவர் சுப்பிரமணியன் மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.