• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் தலைமையில், துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்…

BySeenu

Oct 27, 2023

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து, அத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்கள் ஆணைய தலைவரிடம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இத்துறை சார்ந்து பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.