• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாகன நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதை ஏற்படுத்த வேண்டும் மதிமுக கூட்டத்தில் தீர்மானம்..,

ByKalamegam Viswanathan

Aug 10, 2023

சோழவந்தானில் உள்ள மதிமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார் நிர்வாகிகள் பூமிநாதன் ஹக்கீம் ராஜ்குமார் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒன்றிய நிர்வாகி கருப்பையா வரவேற்றார் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு செப்டம்பர் 15ல் நடைபெறக்கூடிய மாநாடு குறித்து பேசினார் இக்கூட்டத்தில் சோழவந்தானில் அதிகரித்து வரும் வாகன நெருக்கடியால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதற்கு மார்க்கெட்ரோடு மாரியம்மன் கோவில் சன்னதி ஆகிய ரோடுகளில் ஒருவழிப்பாதையாக ஏற்படுத்த வேண்டும் சோழவந்தான் வழியாக அனுமதி பெற்று வாடிப்பட்டி வழியாக செல்லக்கூடிய வெளியூர் பஸ்கள் சோழவந்தான் வழியாக இயக்க வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் சோழவந்தான் அரசு டிப்போவில் இருந்து முழுமையாக பஸ்கள் இயக்க வேண்டும் குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும் புறவழிச் சாலை ஏற்படுத்த வேண்டும் சோழவந்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி எடுக்க வேண்டும் முதல் போகம் விவசாயம் நடைபெறாதால் விவசாயிகளுக்கு நிவாரண வழங்க வேண்டும் வேளாண்மை துறை விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாடு ஆலோசனை வழங்க வேண்டும் அண்ணா பிறந்த நாளன்று மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு திரளாக கலந்து கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் மாவட்ட நிர்வாகிகள் அறிவழகன் ஜெயக்குமார் ஆகியோர் வழிமொழிந்து பேசினார்கள் நிர்வாகி தவமணி நன்றி கூறினார்.