கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம், கொச்சினிலிருந்து பைப் லைனில் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு, சேமித்து இங்கிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை எவ்வாறு கண்டறிந்து அவற்றினை செயலிழக்க செய்வது என்ற செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வெடிகுண்டு இருப்பதை உறுதி செய்த சேமிப்பு கிடங்கு பாதுகாப்பு அதிகாரி போலீசாருக்கு தகவல் கொடுக்கிறார்.

தகவலறிந்து அங்கு வந்த வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் குழுவுடன் வந்த அதிகாரிகள் வளாகத்தை மோப்ப நாயின் உதவியுடன் கண்டறிந்து அவற்றை செயழிக்கச் செய்வது போன்ற ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் காவல்துறை, பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவன அதிகாரிகள், பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்.