• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே உள்ள தனியார் பள்ளி உலகின் 10 பள்ளிகளில் ஒரு பள்ளியாக தேர்வு

ByN.Ravi

Jun 17, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி 2024 ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. யுனைடெட் கிங்டம் (UK) அக்சென்ச்சர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் லெமன் அறக்கட்டளையுடன் இணைந்து, T4 கல்வியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருதுகள் கல்விச் சிறப்பினை உச்சமாகக் கொண்டு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் விளையாட்டு மூலம், குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அர்ப்பணிப்புடன் தனித்து இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் சமூக ஒத்துழைப்புக்காகவும் உலகின் சிறந்த பள்ளிப் பரிசுக்கான முதல் 10 தேர்வுப்பட்டியலில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளி 2019- இல் நிறுவப்பட்டு ஏறத்தாழ 2,359 உள்ளூர் மாணவர்களை விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளது. சிறார் குற்றங்களைக் குறைப்பதற்கும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க, பங்களிப்பை தொடர்ந்து வழங்குகிறது. பதினைந்து மாணவர்கள் தேசிய முதன்மை வெற்றியாளர்களாக தேர்வாகியுள்ளனர். கல்வியுடன் விளையாட்டுகளை ஒருங்கிணைப்பதன் வாயிலாக ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
இப்பள்ளி சிறப்பான கல்வி மற்றும் நெறிமுறைத் தரங்களை நிலை நிறுத்துகிறது. அதன் விரிவான சமூக முன்முயற்சிகள் மற்றும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுடன், கூட்டாண்மை ஆகியவற்றில் தெளிவாக செயல் பட்டு வருகிறது. இத்தகைய ஒத்துழைப்புகள் கல்வி வசதிகள் மற்றும் விளையாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்த உதவியது. மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் பயனளிக்கிறது.
மேலும் , பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிகளை வழங்குகிறது. இந்த முயற்சியானது குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 452 மாணவர்களை கல்வி முறையில் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளது.
முன்னோக்கிப் பார்க்கும்போது, உலகின் சிறந்த பள்ளிப் பரிசுகள் என்ற ஐந்து பிரிவுகளில் ஒவ்வொன்றிற்கும் முதல் 3 இறுதிப் போட்டியாளர்கள் செப்டம்பர் 2024 இல், வெளியிடப்படுவார்கள்.
அதைத் தொடர்ந்து, நவம்பரில் வெற்றி பெறுபவர்கள். கல்வித்துறை, கல்வி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தலைவர்களை உள்ளடக்கிய நடுவர் அகாடமி, கடுமையான அளவுகோல்களின் அடிப்படையில் வெற்றி
யாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த வகையில், உலகில் 10 சிறந்த பள்ளிகளில் ஒரு பள்ளியாக இந்த பள்ளியை தேர்வு செய்துள்ளதாக, தெரிவித்துள்ளனர்.