• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தனி விமானம் வானில் 3 மேற்பட்ட முறை வட்டமடித்ததால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Mar 1, 2026

பிரதமர் விமானம் செல்ல தாமதமானதால் கரைடங்க முடியாமல் விருதுநகரில் பகுதியில் வானிலை சுற்றி தெரிகிறது.

மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜக மத்திய அமைச்சர்கள் மதுரை வருகை தந்தனர்.

பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு பிரதமர் டெல்லி புறப்பட்டு சென்றார். அதேபோல மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லி செல்வதற்காக தனி விமானம் விஜயவாடாவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி செல்லும் தனி விமானம் 6 10 மணிக்கு புறப்படும் என எதிர்பார்த்த நிலையில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

இதனால் மதுரை விமான நிலையத்திற்கு வந்த தனி விமானம் தரையிறங்க முடியாமல் விருதுநகர் பகுதியில் 3 க்கும் மேற்பட்ட முறை வானத்தில் வட்டமடித்ததால் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இன்னும் சற்று நேரத்தில் விமானம் மதுரை விமான நிலையத்தில் திரையிறங்க என எதிர்பார்க்கப்படுகிறது.