• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் பதவி விலகக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!

ByA.Tamilselvan

Mar 6, 2023

திசையன்விளையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி அமைப்பாளராக இருப்பவர் டென்சிங் சுவாமிதாஸ். இவர் திசையன்விளை, இட்டமொழி சுற்றுவட்டார பகுதிகளில் “எட்டு தோல்வி எடப்பாடி” என்ற தலைப்பில் அதிமுக தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதை விமர்சித்து போஸ்டரை ஒட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் (22 தொகுதிகளில் 9யில் அதிமுக தோல்வியை தழுவியது), 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், 2021 இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 8 தோல்விகளை கண்ட எடப்பாடி பழனிசாமி எனவும் உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் என டென்சிங் ஸ்வாமிதாஸ் சுவரொட்டி அடித்துள்ளார்.