சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் அரண்மனை வாசல் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இன்று அவரது பூக்கடை அருகே சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்பொழுது அந்த இரு சக்கர வாகனத்தில் விஷ பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில்
இருந்த விஷப்பம்பை பிடித்தனர். பின்னர் பாம்பு காட்டுப் பகுதிகள் விடப்பட்டது.










