• Mon. Mar 30th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

கஞ்சா வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தவருக்கு த.வெ.க- வில் சீட்..,

Byஜெ.துரை

Mar 30, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் காண்டியப்பன் என்கிற சந்திர காண்டீபன்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த ஆண்டு 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டவர் பத்து நாட்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஜாமீனில் வந்தவுடன் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, மாவட்ட செயலாளர் மதன் மூலம் மேல்மட்ட ஆட்களைப் பிடித்து த.வெ.க.வில் சீட் பெற்றுள்ளார்.

மேலும்,மேலும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏனாதி மதன் என்பவர் பாலியல் வழக்கில் சிக்கி அவர் மீது ஏ1 குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பட்டுக்கோட்டை தொகுதியில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி த.வெ.க வேட்பாளர் ஏனாதி மதனை மாற்றக் கோரி பட்டுக்கோட்டை தவெக நிர்வாகிகள், நகர பொறுப்பாளர் ஆதி ராஜாராம் தலைமையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வீட்டின் முன்பு திரண்டு வருகின்றனர்.

பேராவூரணி தொகுதி வேட்பாளர் சந்திர காண்டீபனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளாளர் முன்னேற்ற கழகம்,முத்தரையர் கூட்டமைப்பு,சமூக நீதி கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் குற்றங்களுக்கும் கஞ்சா மற்றும் போதை உள்ளிட்ட பொருட்களுக்கு எதிராக பேசி வரும் விஜய் சம்பந்தப்பட்டவர்களையே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அந்தத் தொகுதி மக்களுக்கு அதிர்ச்சியும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.