சிவகங்கை மருதுபாண்டியர் பூங்காவில் சிவகங்கை நகராட்சி சார்பில் கோடைவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.


நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமைவகித்தார். பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
விழா மேடையில் மழலையர் பிரிவு மாணவர்கள் முதல் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் வரை பரதம், மேலைநாட்டியம், காந்தாரா நடனம், சிலம்பம், கிக்பாக்ஸிங் என தங்களது தனித்திறமைகளை மிகச்சிறப்பாக அரங்கேற்றம் செய்தனர். விழா நிறைவில் தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சி பகுதியில் மக்களின் மனம் மகிழும் கோடைவிழாவினை சிறப்பாக நடத்திய நகர்மன்ற தலைவருக்கு பள்ளி மாணவியர் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.


மாணவிகள் ரஞ்சிதாஶ்ரீ ஹர்சிகாஶ்ரீ ஆத்மிகா ஆகியோர் கலைநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமாக்கள் திரளாக கலந்து கொண்டு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை மகிழ்வுடன் கண்டு ரசித்தனர்.

