• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை

BySeenu

Mar 11, 2025

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் உள்ள வெறி நாய் கடி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். அவர் திடீரென அங்குள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய் கடிக்கு சிகிச்சைக்கு வந்த இடத்தில் வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.