சிவகங்கை மாவட்டம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை திறக்கப்பட்டது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், முத்துப்பட்டி ஊராட்சி, களத்தூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக நாடக மேடை கட்ட ஒதுக்கீடு செய்தார். நாடக மேடை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நாடக மேடையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன் ஒன்றியச் செயலாளர்கள் செல்வமணி, கோபி, ஸ்ரீ தர், ஊராட்சி மன்ற தலைவர் சோலையப்பன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துப்பட்டி பாபு , சித்தலூர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.