திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி ,கணக்கன்பட்டி, கோம்பை பட்டி, ராம பட்டினம் புதூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கொய்யா, மா, மக்காச்சோளம், நெல் போன்ற விவசாய பொருட்கள் விளைவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு டன் மாங்காய் 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒரு டன் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரை விலை போவதால் தாங்கள் விளைவிக்கக்கூடிய செலவு கூட தங்களுக்கு கட்டுபடி ஆகவில்லை என்றும் தங்கள் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைக்கக்கூடிய மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை திறக்க வேண்டும் எனவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , விவசாயிகளுக்கு மற்றும் குத்தகைக்காரர்கள் பாதுகாக்க மாங்காய்களுக்கு ஒரு டன் 30 ஆயிரம் வரை குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

குளிர்பானங்களில் விதிமுறைப்படி 20% மாம்பழக்கூழ் சேர்க்கப்படுகிறதா என்று ஆய்வு உட்படுத்த வேண்டும் ,, ரசாயன பொருட்களை கூடுதலாக சேர்க்கும் ஜூஸ் கம்பெனியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இறக்கப்படு இறக்குமதி செய்யப்படும் மா சார்ந்த உணவு பொருட்கள் மற்றும் குளிர் பதனங்களை தடை செய்ய வேண்டும்.
குறைந்த விலைக்கு மாம்பழங்களை வாங்கி கொள்ளை லாபமடிக்கும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தன் தலைமையில் ஆயக்குடி பகுதியில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.