• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் நியமனம்

ByA.Tamilselvan

Sep 7, 2022

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். சூலா பிரேவர்மென், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவரது தாய் உமா தமிழ் நாட்டை சேர்ந்தவர். 1960-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திலாந்தில் குடியேறினார். அப்போது இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை உமா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சூலா பிரேவர்மென்.