உயிர்பலிவாங்கும் கொரானா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருமாதம் இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று சமூகஆர்வலர்கள் துவக்கினார்கள்.
கொரோனோ முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு உலகளவில் பலலட்சம் பேர்கள் உயிர்களை இழந்து உள்ள நிலையில் தற்போது மூன்றாவதுஅலை டெல்டாவைரஸ் மற்றும் ஒமிக்கிரான் வைரஸ் என உருமாறி தீவிரமாக பரவிவருகிறது .
இதைத்தடுக்க தமிழகஅரசு தீவிர முயற்சிகள் எடுத்து வந்தாலும் அதை தடுப்பதற்கு தங்களது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஆண்டிபட்டி சமூகஆர்வலர்கள் இன்றிலிருந்து அடுத்தமாதம் 22ஆம் தேதிவரை ஒரு மாதகாலம் இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் துவக்கினார்கள்
ஆண்டிபட்டி வருவாய் வட்டாட்சியர் திருமுருகன் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து இலவச முகக்கவசத்தை கிராமப்புரங்களில் இருந்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கினார் . மக்கள்நலம் பேணும்வகையில் நற்சிந்தனைகளை செயல்படுத்துவோம் என்ற கொள்கை வாசகத்துடன் இந்நிகழ்ச்சியை துவக்கி உள்ள ஆண்டிபட்டி சமூக ஆர்வலர்களின் இச்செயல் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.