• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே பால் பாக்கெட் வாகனம் தீப்பிடித்து எரிந்தது

ByP.Thangapandi

May 17, 2024

மதுரை பாண்டி கோவிலைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் சரக்கு வாகனத்தில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கம்பத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை – தேனி எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் நடுரோட்டில் திடீரென தீபிடித்து எரிந்தது.

மளமளவென வாகனத்தின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக மாறியது,

இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்களும் அச்சத்தோடு கடந்து செல்லாமல் வெடித்துவிடுமோ என தவித்த நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள், சரக்கு வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைத்தனர்.

வாகனத்தை இயக்கி வந்த மதுரையைச் சேர்ந்த சரவணக்குமார் சாதூர்தியமாக வாகனத்திலிருந்து இறங்கி ஓடிய சூழலில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை., வாகனத்தின் முன் பகுதி மற்றும் வாகனத்திற்குள் இருந்த பால் பாக்கெட்டுகள் எடுத்து சொல்லும் பொருட்கள் சேதமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.,