மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா பாலக் கோம்பையைச் சேர்ந்த காட்டு ராஜா என்பவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வேலை செய்துவிட்டு பாலக்காடு திருச்செந்தூர் ரயிலில் தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறங்கும்போது தவறுதலாக கால் இடறி ரயிலிற்க்கும் ரயில் தண்டவாளத்திற்கும் இடையில் கால் சிக்கியதில்ஒரு கால் முற்றிலும் துண்டானது மற்றொரு கால் அதிக சேதம் ஆகிய நிலையில் அருகில் இருந்தவர்கள் ரயிலை நிறுத்த சொல்லி முதல் சிகிச்சை செய்து அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். தங்களுடன்
ரயிலில் வந்தவர் தவறி விழுந்து கால் துண்டானதில்உடன் வந்த நண்பர்கள் மத்தியில்மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது




